“மிட்செலிடம் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” - பயிற்சியாளர் கம்பீர் கருத்து

“மிட்செலிடம்  அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” - பயிற்சியாளர் கம்பீர் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்தார் இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். அவரது செயலுக்காக 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக மிட்செலிடம் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் உங்கள் தேசத்துக்காக விளையாடும் போது இயல்பாகே களத்தில் ஆக்ரோஷம் வெளிப்படும். எந்தவொரு பந்து வீச்சாளரும் தனது பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர்கள் கொடுப்பதை விரும்ப மாட்டார். பந்தை பற்றி, அதை திரும்ப எறிவதில் என்ன தவறு இருக்கிறது? இது மாதிரியான ரெஸ்பான்ஸை தான் நான் எனது வீரர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

அர்ஷ்தீப் செயலில் தவறு ஏதும் இல்லை. அவர் மன்னிப்பு தெரிவிக்க இல்லை என்றாலும் அது சரி என்று நான் கருதுகிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” என பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர் தெரிவித்தார்.

என்ன நடந்தது? - கடந்த 8-ம் தேதி அன்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்தது. இந்த போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் பேட் செய்த போது 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசி​யிருந்​தார்.

அந்த ஓவரின் 4-வது பந்தை நியூஸிலாந்து அணி​யின் பேட்ஸ்​மேன் டேரில் மிட்​செல் அடித்த போது பந்து அர்​ஷ்தீப் வசம் வந்​தது. அப்​போது பந்தை எடுத்த அவர், ஆக்​ரோஷ​மாக ஸ்டெம்​பு​களை நோக்கி வீசிய போது டேரில் மிட்​செல் மீது பலமாக பட்​டது.

ஸ்டெம்​பு​களை விட்டு விலகி நின்​றிருந்த போதும் அர்​ஷ்தீப் சிங், தன் மீது பந்தை எறிந்​த​தால் ஆத்​திரம் அடைந்த டேரில் மிட்​செல் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். களநடு​வரும், கேப்​டன் சூர்​யகு​மார் யாதவும் தலை​யிட்டு பிரச்​சினையை முடிவுக்கு கொண்டு வந்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் ஐசிசி-​யின் நன்​னடத்தை விதி​களை மீறிய​தாக அர்​ஷ்தீப் சிங்​குக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் 15 சதவீதம் அபராத​மாக விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு தகு​தி​யிழப்பு புள்​ளி​யும் அர்​ஷ்தீப் சிங்குக்கு வழங்​கப்​பட்​டுள்​ள​தாக ஐசிசி அறி​வித்​துள்​ளது.

இந்த சூழலில் களத்தில் நடந்த அந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததாக அர்ஷ்தீப் தெளிவுப்படுத்தி இருந்தார். மேலும், மிட்செலிடம் அவர் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.

“மிட்செலிடம்  அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” - பயிற்சியாளர் கம்பீர் கருத்து
IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in