‘ஓவர்சீஸ்’ பிளேயர் எனும் விமர்சனம் - விராட் கோலி விளக்கம்!

‘ஓவர்சீஸ்’  பிளேயர் எனும் விமர்சனம் - விராட் கோலி விளக்கம்!
Updated on
1 min read

லண்டனில் வசித்து வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு ஆடுகையில் அவரை சமூக ஊடகவாசிகள் பலரும் ‘ஓவர்சீஸ்’ பிளேயர் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அன்று பிரமாதமாக ஆடினார். கோலி இப்போதெல்லாம் லண்டன் சென்று அங்கு தன் குடும்பத்துடன் நிம்மதியாக இருந்து வருகிறார். ஒருநாள் தொடருக்காக இந்திய அணியில் ஆட இங்கு வருகிறார், பிறகு ஐபிஎல் மற்றபடி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆர்வமிருந்தால் அங்கிருந்து வந்து ஆடுகிறார். இதனாலெல்லாம் அவரை ‘வெளிநாட்டு’ வீரர் இங்கு வந்து ஆடுகிறார் என்று கடும் கிண்டல்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இத்தகு கேலியைச் சுட்டிக்காட்டி, “சிலர் ஆர்சிபியில் 5 ஓவர்சீஸ் வீரர்கள் ஆடுகின்றனர் என்று கூறுகின்றனர். அவர்கள் உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ” என்று கேட்க அதற்கு விராட் கோலி, என்னை ஏன் கேட்கிறீர்கள்? வெளிநாட்டு வீரர்களைக் கேளுங்கள்.

நான் ஓவர்சீஸ் பிளேயர் அல்ல. நான் ஓவர்சீஸ் பிளேயரா?” என்று முகத்தில் ஓர் அரை புன்னகையுடன் பதிலளித்துள்ளார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18வது சீசனில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைத் தூக்கியது பற்றி ஹோஸ்ட் கேள்வி எழுப்பிய போது விராட் கோலி, “ஆம் முதுகில் மேல் இருந்த பாரம் இறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தோம்.

வெற்றி பெற்ற அந்த இரவுதான் எனக்கு உண்மையில் கோப்பையை வெல்வதன் அர்த்தம் புரிந்தது. அதன் பிறகே அழுத்தம் அனைத்தும் லேசானது.” என்றார் கோலி. கோலி 2025 ஐபிஎல் தொடர் வரை 267 ஐபிஎல் போட்டிகளில் 259 இன்னிங்ஸ்களில் 8,661 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அனைத்து கால அதிக ரன் குவித்த வீரர் கோலியே. 8 சதங்கள், 63 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார்.

‘ஓவர்சீஸ்’  பிளேயர் எனும் விமர்சனம் - விராட் கோலி விளக்கம்!
ஐபிஎல் தொடர்களில் சேசிங் கிங்ஸ் ஆன பஞ்சாப் கிங்ஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in