

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 68 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் விளாசி மிரட்டினார். 243 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான வருண் ஆரோன் கூறியதாவது: அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் முதிர்ச்சி எப்போதுமே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அது வெளிப்படையாகத் தெரிகிறது.
முதிர்ச்சி இல்லாமல் ஒருவரால் உலகின் நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேனாக இருக்க முடியாது. நிச்சயமாக, அவர் எதிரணி மற்றும் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து தனது ஆட்டத்தை மாற்றியமைக்கக்கூடிய வீரர். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் ஒவ்வொரு பந்தையும் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கக்கூடிய ஆடுகளம் அல்ல. எனவே எதிரணிக்கும், ஆடுகளத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
ஷகிப் ஹுசைன், இஷன் மலிங்கா ஆகியோர் மற்ற பந்துஅபிஷேக் அதை சரியாகச் செய்தார். கடந்த காலங்களிலும் அவர், இதை செய்துள்ளார். ஆனால் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடும் ஆட்டத்தில், சில நேரங்களில் அது கைகொடுக்காமல் போகலாம். எனவே அபிஷேக் சர்மா போன்ற வீரருக்கு அந்தச் சுதந்திரத்தை நாம் கொடுத்தே தீர வேண்டும். வீச்சாளர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் திறமைகளை கொண்டுள்ளனர்.
இஷன் மலிங்கா பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்யக்கூடியவர். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11, 12-வது ஓவரிலிருந்தே ரிவர்ஸ் ஸ்விங் மாற்றத்தை பார்க்க முடிந்தது. இது எதிரணிக்கு மிகவும் கடினமாகிவிடும். ஏனென்றால் வெள்ளை பந்தில் அதன் பளபளப்பான பகுதி எங்கே இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாகக் கண்டறிய முடியாது. மேலும் இஷன் மலிங்காவால் துல்லியமாக யார்க்கர்களை வீச முடியும், அவரிடம் வேகம் குறைந்த பந்துகளை வீசும் திறனும் உள்ளது.
மேலும் 140 முதல் 145 கி.மீ வேகத்துக்கும் மேல் வீசக்கூடிய திறமையும் உள்ளது. ஷகிப் ஹுசைனும் வேகம் குறைந்த பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர். சாதாரண பந்தை வீசும் அதே வேகத்தில் கையைச் சுழற்றி ஆஃப்-ஸ்பின்னில் பந்து திரும்புவதைப்போல வேகம் குறைந்த பந்தில் திருப்புகிறார். அதேவேளையில் யார்க்கர்களையும் சரியாக வீசுகிறார், 140 கி.மீ வேகத்திற்கு மேலும் பந்து வீசும் திறன் அவரிடம் உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு செல்லும் திசையையும், ஐபிஎல் முன்னேறி வரும் விதத்தையும் பார்த்தால், பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தில் மாற்றங்களை கொண்டிருப்பது அவசியம். 140-145 கி.மீ வேகத்திலிருந்து அப்படியே 107 கி.மீ வரை வேகத்தைக் குறைத்து வீசத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.