மலேசி​யா​ ஸ்குவாஷில் அபய் சிங் சாம்பியன்

மலேசி​யா​ ஸ்குவாஷில் அபய் சிங் சாம்பியன்
Updated on
1 min read

புதுடெல்லி: மலேசி​யா​வில் உள்ள நெகிரி செம்​பிலான் பகு​தி​யில் துவாங்கு முஹ்ரிஸ் கோப்​பைக்​கான பிஎஸ்ஏ சாலஞ்​சர்ஸ் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்​றது.

இதன் இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 24-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அபய் சிங், 59-வது இடத்​தில் உள்ள ஹாங்​காங்​கின் ஹென்றி லியுங்​குடன் மோதி​னார். இதில் அபய் சிங் 11-7 6-11 3-11 11-5 12-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in