பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனை​களுக்கு சிறப்பான வரவேற்பு

பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனை​களுக்கு சிறப்பான வரவேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: காமன்வெல்த் போட்​டி​யில் பதக்கம் வென்று நாடு திரும்​பிய இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு விமான​நிலையத்தில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்று தங்​களது விளை​யாட்​டு​கள் முடிந்த நிலையில் இந்​திய அணி​யில் ஒரு பிரி​வினர் நேற்று காலை தாயகம் திரும்​பினர்.

டெல்லி இந்​திரா காந்தி விமான​நிலை​யத்​தில் வந்​திறங்​கிய வீரர், வீராங்​க​னை​களுக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பளுதூக்​குதல் போட்​டி​யில் தங்​கம் வென்ற மீரா​பாய் சானு, ஆடவர் பிரி​வில் வெள்ளி வென்ற லவ்​பிரீத் சிங் ஆகியோ​ருக்கு ஒலிம்​பிக் சங்க நிர்​வாகி​கள் மாலை அணி​வித்து வரவேற்​றனர்.

மீரா​பாய் சானு, காமன்​வெல்த் விளை​யாட்​டில் தொடர்ச்​சி​யாக 3-வது தங்​கத்​தைக் கைப்​பற்​றி​யிருந்​தார். அதே​போல் ஆடவர் +110 கிலோ பிரி​வில் வெள்​ளியை லவ்​பிரீத் சிங் வென்​றிருந்​தார். மேலும், மகளிர் 58 பளுதூக்​குதல் பிரி​வில் வென்ற இந்​திய வீராங்கனை பிந்​தி​யா​ராணி தேவி சோரோ​காய்​பா​முக்​கும் சிறப்பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

இந்த காமன்​வெல்த் போட்​டி​யின் பளுதூக்​குதல் பிரி​வில் இந்​தியா ஒரு தங்​கம், 6 வெள்​ளி, ஒரு வெண்​கலத்​தைக் கைப்​பற்றியிருந்தது. வீரர், வீராங்​க​னை​களு​டன் அணி​யின் பளுதூக்குதல் பிரிவு தலை​மைப் பயிற்​சி​யாளர்​ விஜய்​ சர்​மா​வும்​ வந்​திருந்​தார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in