

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் தோனி இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனேயே விளையாடி இருந்தார். விக்கெட் கீப்பிங் பணியை அவர் சிறப்பாக கையாண்ட போதிலும் பேட்டிங்கின் போது ரன்களை விரைவாக ஓடி எடுப்பதில் சில ஆட்டங்களில் சிரமங்களை சந்தித்தார்.
இந்நிலையில், தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற உள்ளார். அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுரை வழங்கினால் அதுதொடர்பான அறிக்கைகள் வந்த பிறகு முடிவு செய்யப்படும் எனவும் அதுவும் தோனிதான் அதை முடிவு செய்வார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.