Published : 29 May 2023 09:59 PM
Last Updated : 29 May 2023 09:59 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சாய் சுதர்ஷன். 47 பந்துகளில் 96 ரன்களை அவர் எடுத்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.26.
21 வயதான அவர் நடப்பு சீசனில் மொத்தம் 8 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். இதில் மொத்தம் 3 அரைசதங்கள் அடங்கும். அவர் மொத்தமாக 362 ரன்களை நடப்பு சீசனில் எடுத்துள்ளார். 22, 62 (நாட்-அவுட்), 53, 19, 20, 47, 43 மற்றும் 96 ரன்கள் என ஒவ்வொரு போட்டியிலும் ரன் எடுத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் மைதானத்தின் அனைத்து திசையிலும் ரன் குவித்து அசத்தினார். சென்னை அணி பவுலர்கள் வீசிய மோசமான பந்துகள் மற்றும் நல்ல பந்துகள் என அனைத்தையும் அடித்து ஆடினார். தொடக்கத்தில் இன்னிங்ஸை நிதானமாக தொடங்கினார். ஆனால், அப்படியே ஆட்டத்தில் வேகம் கூட்டி அதை மடைமாற்றி இருந்தார். மிட் விக்கெட், தேர்ட் மேன் மற்றும் கவர் திசையில் மட்டுமே 76 ரன்களை அவர் குவித்திருந்தார்.
சாய் சுதர்ஷன் படைத்துள்ள சாதனை
@sais_1509 on song
Can he finish on a high for @gujarat_titans?
Follow the match https://t.co/WsYLvLrRhp#TATAIPL | #Final | #CSKvGT pic.twitter.com/z7qL4Dav1w— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT