WTC Final | இந்திய அணியுடன் இணைந்த விராட் கோலி
லண்டன்: வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் விராட் கோலி, இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.
அருண்டெல் கேசில் கிரிக்கெட் கிளப்பில் இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டிக்கான பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்தப் படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
கோலி, உமேஷ் யாதவ், புஜாரா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் மேற்பார்வையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். ஜடேஜா, சுப்மன் கில், ஷமி, கே.எஸ்.பரத், ரஹானே ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து புறப்பட உள்ளனர். ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த கையோடு அவர்கள் இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.
