Published : 26 May 2023 02:05 PM
Last Updated : 26 May 2023 02:05 PM
சென்னை: “பதிரனா குறித்து கவலை வேண்டாம்; என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” என்று பதிரனாவின் குடும்பத்திடம் தோனி உறுதியளித்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான பத்ரினா, அந்த அணியின் நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார். ரசிகர்களிடமும் அவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. எலிமினேட்டர் 2-இல் வெல்லும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது.
இந்த நிலையில், பதிரனாவின் குடும்பத்தினர் தோனியை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பதிரனாவின் சகோதரி விஷுகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் தற்போது உறுதியாக நம்புகிறோம், பதிரானா தற்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்... ”நீங்கள் மதிஷா குறித்து கவலை கொள்ள வேண்டாம்.. அவர் எப்போதும் என்னுடன் இருப்பார்” என்று தோனி என்று கூறினார். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதற்கும் அப்பாற்பட்டவை” என்று பதிவிட்டார்.
இத்துடன் பதிரனாவின் குடும்பத்தினர் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
முன்னதாக தோனி, “பதிரனா சிறப்பாக பந்து வீசுகிறார். என்னளவில் பதிரனா அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் அருகில் கூட வர வேண்டாம் . ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கூட (ஒரு நாள் கிரிக்கெட்), அவர் குறைவாக விளையாடலாம். அதே வேளையில் நல்ல உடற்தகுதியுடன் அவர் ஐசிசி போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT