தோனி வாக்குமூல பதிவு விசாரணை 16-க்கு ஒத்திவைப்பு

தோனி வாக்குமூல பதிவு விசாரணை 16-க்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

இப்போது இந்த விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 16-ம் தேதிக்கு நேற்று ஒத்திவைத்தது.

பிசிசிஐ-யின் இந்த கோரிக்கைக்கு பிகார் கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தோனி மற்றும் சீனிவாசனின் வாக்குமூலத்தை தரும்படி நீதிமன்றத்தில் கேட்க பிசிசிஐ-க்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள பிகார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் அஜீத் சின்ஹா, அப்படி பிசிசிஐ-க்கு அந்த ஒலிப்பதிவுகளை அளித்தால் அதனை தங்கள் தரப்புக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in