

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 25மீ ரேபிட் ஃபயர் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஹர்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீரர் விஜய் குமார் இறுதிச் சுற்றுக்குத் தகுதியாகாததைத் தொடர்ந்து ஹர்பிரீத் சிங் வெள்ளி வென்று பெருமையை நிலைநாட்டியுள்ளார்.
8 முறை 5 ஷாட்கள் இலக்கை நோக்கி சுடவேண்டிய 6 வீரர்கள் பங்கு பெற்ற இறுதிச் சுற்றில் ஹர்பிரீத் சிங் 21 முறை இலக்கை குறிதவறாது சுட்டார்.
தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் சாப்மேன் 23 முறை இலக்கைக் குறிதவறாது சுட்டார்.
கடைசி 5 ஷாட்களில் ஹர்பிரீத் 2 ஷாட்களையே சரியாகச் சந்திக்க, சாப்மேன் 4 முறை சரியாக இலக்கை நோக்கிச் சுட்டார். இதனால இந்தியாவுக்குத் தங்கப் பதக்க வாய்ப்பு பறிபோனது.