

சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 85 ரன்களைச் சேர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவுக்காக தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோபால் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.
அடுத்து வந்த ஃப்ரீ ஹிட்டில் சிக்சரை ஹிட் செய்து ஃபார்முக்கு திரும்பினார் ருதுராஜ். மறுபுறம் டெவோன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்ந்திருந்தது சிஎஸ்கே. 8 போர் 1 சிக்சர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 36 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார். கான்வே நிதானமான ஆடி துணை நின்றார். 10 ஓவர்கள் முடிவில் 85 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருவரும் விளையாடி வருகின்றனர். | அண்மை அப்டேட் > மிடில் ஆர்டர் தடுமாற்றம்; 'ஸ்லோ' பாலில் வீழ்ந்த தோனி - சிஎஸ்கே 172 ரன்கள் சேர்ப்பு