இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆனது ‘அடிடாஸ்’

இந்திய அணி வீரர்கள் | கோப்புப்படம்
இந்திய அணி வீரர்கள் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆகியுள்ளது ‘அடிடாஸ் பிராண்ட்’. எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய ஸ்பான்சரான அடிடாஸ் வடிவமைத்த மற்றும் தயாரித்த ஜெர்சியை அணிந்து விளையாடும்.

வரும் 2028 மார்ச் மாதம் வரையில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் அண்டர் 19 கிரிக்கெட் அணிகளுக்கு வேண்டிய ஜெர்சி, கிட் மற்றும் இதர மெர்சண்டைஸை அடிடாஸ் வடிவமைத்து மற்றும் தயாரித்து கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் அடிடாஸ் சிஇஓ பியான் குல்டன் ஆகியோர் இரு தரப்புக்கும் இடையிலான கூட்டை பரஸ்பரம் வரவேற்றுள்ளனர்.

கடந்த 2020 நவம்பரில் நைக் நிறுவனத்துடனான 15 ஆண்டு கால கிட் ஸ்பான்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து அதற்கான புதிய டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் (MPL) இணைந்தது. இருப்பினும் முன்கூட்டியே எம்பிஎல் வெளியேற கடந்த ஜனவரியில் ‘கில்லர் ஆடை பிராண்ட்’ இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக இணைந்தது. இந்த சூழலில் இனி அடிடாஸ் அதை தொடர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in