தோல்வி விரக்தியில் கில்லின் சகோதரியை விமர்சித்த ஆர்சிபி ரசிகர்கள்

தோல்வி விரக்தியில் கில்லின் சகோதரியை விமர்சித்த ஆர்சிபி ரசிகர்கள்
Updated on
1 min read

பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் நேற்று (மே 21) பெங்களூரு அணியின் தோல்விக்கு குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்த கில்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்கள் வசைபாடினர். கில் மட்டுமல்லாது அவரது சகோதரியான ஷா நீலையும் ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்தனர்.

குஜராத் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.

பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு அணியின் தோல்விக்கு குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்த கில்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்கள் வசைபாடினர்.

கில் மட்டுமல்லாது அவரது சகோதரியான ஷா நீலையும் ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்தனர்.

ஆர்சிபி அணியின் தோல்விக்குப் பிறகு இன்ஸ்டாவில் ஷா நீல் ”என்ன ஒரு முழுமையான நாள்” என்று குஜராத் - பெங்களூர் கிரிக்கெட் போட்டியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு ஆர்சிபி ரசிகர்கள் படையெடுத்தனர்.

அவரை விமர்சித்து அவரது புகைப்படங்களின் கீழ் ஆர்பிசி ரசிகர்கள் மோசமாக பதிவிட தொடங்கினர்.அவரது குடும்பத்தையும் விமர்சித்தனர்.

இதனைக் கண்ட கில்லின் ரசிகர்கள் பலரும் ஆர்சிபி ரசிகர்களின் செயலை கண்டித்து பதிவிட்டனர்.

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனின் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுகின்றன. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in