'ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம்' - லக்னோ வீரர் ரவி பிஷ்னோய் உறுதி

ரவி பிஷ்னோய்
ரவி பிஷ்னோய்
Updated on
1 min read

கொல்கத்தா: 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ரவி பிஷ்னோய் கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றிக்குப் பின்னர் ரவி பிஷ்னோய் கூறியதாவது.

வெற்றிக்குப் பின்னர் எப்போதும் மகிழ்ச்சிதான். இந்த வெற்றியின் மூலம் எங்களது மன உறுதி அதிகரித்துள்ளது. கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் சிறப்பாக ஆடி எங்களது வெற்றியைப் பறிக்க தீவிரமாக முயற்சித்தார். அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் இவ்வாறு பேட்டிங் செய்து நான் பார்த்ததே இல்லை. அவர் களத்தில் இருக்கும்போது வீசப்பட்ட ஒவ்வொரு பந்தும் எங்களது வெற்றியைப் பறித்துவிடுமோ என்ற பயம் இருந்தது. இறுதியில் வெற்றி பெற்றுவிட்டோம்.

தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டோம். பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் கோப்பையை வெல்வதுதான் எங்களது திட்டம். கோப்பையை வெல்வதற்கு கடும் முயற்சி செய்வோம். அனைத்து வீரர்களும் கடுமையாகப் போராடுவோம். இவ்வாறு ரவி பிஷ்னோய் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in