IPL | கிறிஸ் கெயிலின் 'சத' சாதனையை சமன் செய்த கோலி: அதிக சதம் பதிவு செய்த வீரர்கள் யார், யார்?

கோலி மற்றும் கிறிஸ் கெயில் | கோப்புப்படம்
கோலி மற்றும் கிறிஸ் கெயில் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் விளாசி அசத்தி இருந்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி. இது ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்யும் ஆறாவது சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கெயிலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆறு சதங்களை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலி விளையாடினாலே அந்தப் போட்டியில் அவர் தகர்க்க உள்ள அல்லது சமன் செய்ய உள்ள சாதனைகளை போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்கள் பட்டியலிடும். அந்த அளவுக்கு பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் கோலி. இது சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் வரை நீள்கிறது.

கடந்த 2008 முதல் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 236 போட்டிகள். அதில் 228 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். 7,162 ரன்கள் பதிவு செய்துள்ளார். இதில் 50 அரை சதங்கள் மற்றும் 6 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் கடந்த 2016 சீசனில் மட்டுமே 4 சதங்களை கோலி பதிவு செய்திருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர்கள் யார், யார்?

  • விராட் கோலி - 6
  • கிறிஸ் கெயில் - 6
  • ஜாஸ் பட்லர் - 5
  • கே.எல்.ராகுல் - 4
  • டேவிட் வார்னர் - 3
  • ஷேன் வாட்சன் - 3

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in