Published : 14 May 2023 06:13 AM
Last Updated : 14 May 2023 06:13 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது ராஜஸ்தான் அணி.
தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்த சீசனில் 12 ஆட்டங்களில் ஒரு சதம், 4 அரை சதங்கள் என 575 ரன்களை வேட்டையாடி உள்ள தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லரும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர்தான்.
இவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரல் ஆகியோரும் மட்டைவீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் 21 விக்கெட்களை வேட்டையாடி உள்ள யுவேந்திர சாஹல், பெங்களூரு பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும். டிரெண்ட் போல்ட், அஸ்வின், சந்தீப் சர்மா ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
பெங்களூரு அணி 11 ஆட்டத்தில் விளையாடி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும்.தனது கடைசி இரு ஆட்டங் களிலும்தோல்வியை சந்தித்த நிலையில்இன்றைய ஆட்டத்தை எதிர் கொள்கிறது பெங்களூரு அணி. இந்தசீசனில் 576 ரன்களை குவித்துள்ளடு பிளெஸ்ஸிஸ் மீண்டும் மட்டையை சுழற்றக் கூடும்.
அதேவேளையில் விராட் கோலியிடம் இருந்து நிலையான திறன் வெளிப்படவில்லை. எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர்,கூடுதல் பொறுப்புடன் செயல்படக்கூடும். இவர்களைத் தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் அதிரடி வீரராக உள்ளார். அதேவேளையில் நடுவரிசையில் மஹிபால் லாம்ரோர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படாதது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT