

மதுரை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு, மதுரை எம்ஜிஆர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வாளர்கள் சுதாஷா, மஞ்சுளா, மாதவன், பி.சி.பிரகாஷ் ஆகியோர் வீராங்கனைகளை தேர்வு செய்தனர். இதில் 13 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் 59 பேர் கலந்துகொண்டனர். 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பிரபாகரன், செய்யது இப்ராகிம், இணைச் செயலாளர் ராம் டிட்டோ ஆகி யோர் செய்தனர்.