IPL 2023 | ஜாஸ் பட்லருக்கு அபராதம்

IPL 2023 | ஜாஸ் பட்லருக்கு அபராதம்
Updated on
1 min read

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். இருப்பினும் யஷஸ்வியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in