

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா, நான்சி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா இறுதிப் போட்டியில் 251.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹங்கேரியின் ஜலான் பெக்லர் 252.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் லிஹாவோ ஷெங் 230.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர்,253.3 புள்ளிகள் எடுத்தார். சீனாவின்ஜியாவு ஹன் 254 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு சீன வீராங்கனையான யுடிங் ஹூவாங் 232.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.