

தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் சார்பில் 15-வது தேசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25 முதல் 27-ம் தேதி வரை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ளது.
ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் போட்டி நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் 30 அணிகளும், மகளிர் பிரிவில் 25 அணி களும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியை இந்திய வாலிபால் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீ சௌத்ரி அவதேஷ் குமார் தொடங்கி வைக்கிறார். காலை 7 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் போட்டி நடைபெறும். இந்தப் போட்டி ஆசிய பீச் வாலிபால் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியாகும்.