என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள் - சிஎஸ்கே அணியினரிடம் தெரிவித்த தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனி
சிஎஸ்கே கேப்டன் தோனி
Updated on
1 min read

சென்னை: "என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள் என்று அணியினரிடம் கூறிவிட்டேன். என் பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது .27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கேவுக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய தோனி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, "இந்த ஐபிஎல் - ஐ பொறுத்தவரை இதுதான் என் வேலை. நான் இதைத்தான் செய்யப் போகிறேன். என்னை அதிகமாக ஓட வைக்காதீர்கள். என்று எனது அணியினரிடமும் கூறிவிட்டேன். அதன்படியே செயல்பட்டு வருகிறேன். அணியில் என் பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

முன்னதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங், "தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால், கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in