

காமன்வெல்த் மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சன்டோஷி மட்ஸா வெண்கலப் பதக்கம் வென்றார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும்.
ஆந்திரத்தைச் சேர்ந்த 16 வயது சன்டோஷி ஸ்னாட்ச், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் மொத்தம் 188 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். இதேபிரிவில் நைஜீரியாவின் சிகா அமலஹா தங்கப் பதக்கம் வென்றார். அவர் 196 கிலோ எடையைத் தூக்கினார். 193 கிலோ எடையைத் தூக்கிய பப்புவா மற்றும் நியூகினியா வீராங்கனை டிகா டோவா வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வாதி சிங், 183 கிலோ எடையைத் தூக்கி 4-வது இடத்தைப் பிடித்தார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 2-வது முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுள்ளார் ஸ்வாதி சிங். இவர் கடந்த முறையும் 4-வது இடத்தையே பிடித்தார்.