Last Updated : 01 Sep, 2017 11:51 AM

 

Published : 01 Sep 2017 11:51 AM
Last Updated : 01 Sep 2017 11:51 AM

தொடர் முடிந்தவுடன் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன்: விரக்தியில் மலிங்கா

இலங்கை கேப்டன் லஷித் மலிங்கா நடப்பு தொடர் முடிந்தவுடன் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

4-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் 300 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் 10 ஓவர்களில் 82 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

நான் காயத்தினால் 19 மாதங்களுக்குப் பிறகே ஆடுகிறேன். ஜிம்பாப்வே, மற்றும் இந்திய அணிக்கு எதிராக நான் சரியாக ஆடவில்லை. இந்தத் தொடர் முடிந்தவுடன் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைப் பார்த்து, எவ்வளவு காலம் தொடர முடியும் என்பதைக் கணித்து முடிவெடுப்பேன்.

நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும் சரி, அணிக்காக போட்டியை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை எனில், அணிக்குத் தேவையானதைச் செய்ய முடியவில்லை எனில் தொடர்ந்து ஆடுவதில் என்ன பயன்? 19 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய பார்முக்கு 3-4 மாதங்களில் திரும்ப முடியுமா என்று பார்க்கப் போகிறேன்.

விராட் கோலி, ரோஹித் அருமையாக ஆடினர், குறிப்பாக விராட் கோலி முதல் 30-40 ரன்களை விரைவு கதியில் அடித்தார். பிட்சில் புல் இருந்ததால் ஸ்விங் ஆகும் என்று நினைத்து புல் லெந்தில் வீசினோம், அது எடுபடாமல் போனது.

இதற்கு முந்தைய இலங்கை அணியில் 100 போட்டிகள் அல்லது 50 போட்டிகள் ஆடிய அனுபவ வீர்ர்கள் இருந்தனர், இந்த அணியில் அந்த அனுபவம் இல்லை. மற்ற அணிகள் இந்த விதத்தில் அனுபவ வீரர்களைக் கொண்டுள்ளது, இலங்கையும் அந்த இடத்துக்கு வர வேண்டும்.

இவ்வாறு கூறினார் மலிங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x