IPL 2023 | நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகல்!

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்
Updated on
1 min read

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர், இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். 23 வயதாகும் இவர், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர். கடந்த 2022 முதல் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் இவர், அதற்கு முன் பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி உள்ளார்.

நடப்பு சீசனில் ஹைதராபாத் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் 6 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாத இவர், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 5 இன்னிங்ஸில் பேட் செய்து மொத்தம் 60 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சூழலில் அவரது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் நடப்பு சீசனில் இருந்து விலகி உள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in