

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் மார்க் வுட், தனது குழந்தை பிறப்பையொட்டி அடுத்த மாதம் தாயகம் செல்கிறார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் இந்த சீசனில் லக்னோ அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 8.12 ரன்களை வழங்கி உள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரு ஆட்டங்களிலும் அவர் களமிறங்கவில்லை.
இந்நிலையில், மார்க் வுட்டின் மனைவி சாரா 2-வது குழந்தையை மே மாத இறுதியில் பெற்றெடுக்க உள்ளார். இதனால் மார்க் வுட் இன்னும் சில வாரங்களில் தாயகம் புறப்பட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் அவர், ஐபிஎல் தொடரின் இறுதிப்பகுதியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது.