சச்சின், லாராவை கவுரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

லாரா மற்றும் சச்சின்
லாரா மற்றும் சச்சின்
Updated on
1 min read

சிட்னி: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவையும் கவுரவித்துள்ளது சிட்னி கிரிக்கெட் மைதானம். அவர்களின் நினைவாக மைதானத்தின் வாயிலுக்கு (கேட்ஸ்) அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை கடந்துதான் ஆடுகளத்துக்குள் விசிட்டிங் அணியின் வீரர்கள் என்ட்ரியாக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடம் உள்ளது. லாரா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தது சிட்னி மைதானத்தில்தான். 1993-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்திருந்தார் அவர்.

சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு இவரது பேட்டிங் சராசரி 157. லாரா, சிட்னி மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

“இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று. எனது முதல் ஆஸ்திரேலிய (1991-92) பயணத்தில் இருந்து இனிதான நினைவுகளை இந்த மைதானத்துடன் கொண்டுள்ளேன்” என சச்சின் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று இந்த நிகழ்வில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in