Published : 23 Apr 2023 08:18 AM
Last Updated : 23 Apr 2023 08:18 AM

IPL 2023 | பெங்களூரு - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

கோப்புப்படம்

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு 6 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் லக்னோவிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 155 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ்பட்லர் ஜோடி 11.3 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்து கொடுத்த நிலையில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேரிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனமுடன் செயல்படக்கூடும்.

சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் ரன்கள் குவித்தாலும் இவர்களிடம் இருந்து தொடர்ச்சியான செயல்திறன் வெளிப்படுவது இல்லை. தேவ்தத் படிக்கல், ரியான் பராக் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான செயல் திறன் வெளிப்படாததும் பலவீனமாக உள்ளது.

பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்கள் அதிரடியாக விளையாடும் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டு பிளெஸ்ஸிஸ், விராட் கோலி கூட்டணிக்கு நெருக்கடி தர முயற்சிக்கக்கூடும்.

டு பிளெஸ்ஸிஸ், விராட் கோலி ஆகியோர் இந்த சீசனில் தலா 4 அரை சதங்களை விளாசி சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களுடன் கிளென் மேக்ஸ்வெல்லும் பார்முக்கு திரும்பி உள்ளார். தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோர், ஷாபாஷ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் நடுவரிசையில் பொறுப்புடன் செயல்பட்டால் ராஜஸ்தான் அணிக்கு அனைத்து வகையிலும் சவால் அளிக்கலாம்.

பெங்களூரு அணியின் பந்து வீச்சில் மொகமது சிராஜ் சிறந்த பார்மில் உள்ளார். 6 ஆட்டங்களில் 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ள அவருக்கு, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், ஹசரங்கா ஆகியோரும் ஆதரவாக வீசுவது பலத்தை அதிகரிப்பதாக உள்ளது. எனினும் பார்னல், ஹர்ஷல் படேல் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. இந்த விஷயத்தில் பெங்களூரு அணி தீவிர கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x