Published : 25 Apr 2014 01:04 PM
Last Updated : 25 Apr 2014 01:04 PM

டெல்லி-சன்ரைஸர்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள சன்ரைஸர்ஸ் தனது 3-வது ஆட்டத்தில் டெல்லியை சந்திக்கிறது. ஆனால் டெல்லி அணியோ தொடர்ச்சியாக சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரிடம் தோல்வி கண்ட டெல்லி, பின்னர் கொல்கத்தாவை வீழ்த்திய நிலை யில், 3-வது ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸிடம் தோல்வி கண்டது

காயம் காரணமாக கடந்த ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் பீட்டர்சன் இன்றைய போட்டியில் அணிக்குத் திரும்புகிறார். அதனால் டெல்லி அணி பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைஸர்ஸ் அணி கடந்த ஆட்டங்களில் பேட்டிங், பௌலிங் என அனைத்துத் துறைகளிலும் முற்றிலும் செயலிழந்துவிட்டதை அதன் கேப்டன் ஷிகர் தவணே ஒப்புக்கொண்டார். அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் என இரு பலம் வாய்ந்த பேட்ஸ் மேன்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து தடுமாறி வருவது கவலையளிப்பதாக உள்ளது. இதேபோல் மிடில் ஆர்டரில் வேணுகோபால், லோகேஷ் ராகுல் ஆகியோரும் சரியாக ஆடாதது அந்த அணியின் ரன் குவிப்பில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், டேல் ஸ்டெயின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், கடந்த ஆட்டத்தில் அந்த அணியின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவை மேக்ஸ்வெல் பதம்பார்த்துவிட்டார்.

டெல்லி அணியில் கேப்டன் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், ஜே.பி.டுமினி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் முகமது சமி, ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஜே.பி.டுமினி, சபேஸ் நதீம் இருவராலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இது பின்னடை வாகக் கருதப்படுகிறது.

டெல்லி - சன்ரைஸர்ஸ்

போட்டி நேரம் : மாலை 4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x