IPL 2023: MI vs KKR | வெங்கடேஷ் ஐயர் ஒன் மேன் ஷோ - மும்பைக்கு 186 ரன்கள் இலக்கு

IPL 2023: MI vs KKR | வெங்கடேஷ் ஐயர் ஒன் மேன் ஷோ - மும்பைக்கு 186 ரன்கள் இலக்கு

Published on

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 185 ரன்களைச் சேர்த்துள்ளது.

16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அறிமுக வீரராக அர்ஜூன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டார்; அதேபோல அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தினார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜெகதீசன் இணை கொல்கத்தாவுக்கு தொடக்கம் கொடுத்த நிலையில், ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே விக்கெட்டானார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் மும்பை அணியின் பந்துகளை அடித்து விளாச, மறுபுறம் வந்த வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களிலும், நிதிஷ் ரானா 5 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 13 ரன்களில் வெளியேறினர்.

51 பந்துகளில் 9 சிக்சர்கள் அடித்து 104 ரன்களைச் சேர்த்த வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டாக, ரின்கு சிங்கும் 18 ரன்களுடன் கிளம்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. ஆண்ட்ரே ரசல்21 ரன்களுடனும், சுனில் நரைன் 2ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ஹ்ரித்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா, கிரீன், டூவான் ஜேன்சன், ரிலே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in