IPL 2023: LSG vs PBKS | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் - பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு

IPL 2023: LSG vs PBKS | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் - பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு
Updated on
1 min read

லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 159 ரன்களை சேர்த்துள்ளது.

16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் கிளம்பினார்.

குருணால் பாண்டியா 18 ரன்களிலும், நிகோலஸ் பூரான் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்ப கே.எல்.ராகுல் மறுபுறம் நின்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களில் அவுட்டானதும், 56 பந்துகளில் 74 ரன்களை குவித்த கே.எல்.ராகுலும் கிளம்பினார். கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங் வரிசையாக விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், சிங்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in