IPL 2023 | 'ரூ.13.25 கோடிக்கு ஒர்த் ஆன இன்னிங்ஸ்' - நெட்டிசன்கள் பாராட்டு மழையில் ஹாரி ப்ரூக்

IPL 2023 | 'ரூ.13.25 கோடிக்கு ஒர்த் ஆன இன்னிங்ஸ்' - நெட்டிசன்கள் பாராட்டு மழையில் ஹாரி ப்ரூக்
Updated on
1 min read

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் வீரர் ஹாரி ப்ரூக் எடுத்த சதம் இந்த சீசனில் முதல் சதமாக அமைந்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 19வது மேட்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஓபனிங் வீரர் ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடினார்.

பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை வெளுத்துவாங்கிய ப்ரூக் 55 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். நாட் அவுட் பேட்ஸ்மேனாக அவர் எடுத்த சதத்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடக்கம். அவரின் சதம் உதவியுடன் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்ட ப்ரூக்கிற்கு தொடரின் தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கிய அவர், மூன்றாவது போட்டியில் ஓப்பனிங் இறங்கினார். எனினும், இந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்தே 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் சரவெடியாய் வெடித்தார். பவர் பிளே ஓவர்களில் அட்டாக்கிங், மிடில் ஓவர்களில் நிதானம், இறுதி ஓவர்களில் மீண்டும் அட்டாக்கிங் என அவர் பெர்பாமென்ஸ் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, ஐபிஎல்லில் அவரின் கன்னி சதத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

''ப்ரூக் ஐபிஎல்லின் சூப்பர் ஸ்டாராக இருப்பார்…'' என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Irfan Pathan (@IrfanPathan) April 14, 2023

"ஹாரி ப்ரூக்கை இன்னிங்ஸை ஓபன் செய்ய வைத்தற்கு பலன் கிடைத்துள்ளது. இந்த சீசனில் முதல் சதம்" என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Aakash Chopra (@cricketaakash) April 14, 2023

அதேபோல் மற்றொரு ட்விட்டர் பயனரோ, "ஹாரி ப்ரூக் தனது மதிப்பு ஏன் 13.25 கோடி என்று காட்டிவிட்டார். வியக்க வைக்கும் இன்னிங்ஸ்!" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in