CSK vs RR | 2019-ல் சேப்பாக்கத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே!

தோனி மற்றும் சஞ்சு சாம்சன் | கோப்புப்படம்
தோனி மற்றும் சஞ்சு சாம்சன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த 2019-ல் சேப்பாக்கம் மைதானத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் இதுவரை 26 முறை பலப்பரீட்சை செய்துள்ளன. அதில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2019 சீசனுக்கு பிறகு 5 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அதில் 4 முறை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன. அதில் சென்னை 6 முறை வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 சீசனுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடப்பு சீசனில்தான் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடி வருகிறது.

2019 சீசனில் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகள் விளையாடிய போது 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. தோனி, 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

176 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. பென் ஸ்டோக்ஸ், 26 பந்துகளில் 46 ரன்கள் குவித்திருந்தார். அதன் பிறகு இந்த முறைதான் இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in