IPL 2023 | DC vs MI: வெற்றிக் கணக்கை தொடங்கப்போவது யார்? - முன்னோட்ட பார்வை

டேவிட் வார்னர் | கோப்புப்படம்
டேவிட் வார்னர் | கோப்புப்படம்
Updated on
1 min read

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு அணிகளும் இந்தப் போட்டியில் தங்களது வெற்றிக் கணக்கை துவங்க முயற்சிக்கும்.

இந்த சீசனில் டெல்லி அணி பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் மோசமாக பந்து வீசி வருகிறது. அதே நேரத்தில் மும்பை அணி பேட்டிங் யூனிட்டில் சொதப்பி வருகிறது. டெல்லி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியை தழுவி உள்ளது. மும்பை அணி இரண்டு போட்டிகளில் விளையாடி அந்த இரண்டிலும் தோல்வியை தழுவி உள்ளது.

ஐபிஎல் அரங்கில் இதுவரை டெல்லி மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் விளையாடிய 32 போட்டிகளில் மும்பை அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த சீசனில் இரு அணிகளும் இரண்டு முறை பலப்பரீட்சை செய்ததில் தலா ஒரு வெற்றியை இந்த அணிகள் பதிவு செய்திருந்தன.

நடப்பு சீசனில் டெல்லி அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக பேட் செய்து வருகிறார். மூன்று போட்டிகளில் 158 ரன்களை அவர் குவித்துள்ளார். அவருக்கு பேட்ஸ்மேன்கள் துணை நின்றால் பெரிய ஸ்கோரை அந்த அணி எடுக்கும். மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பது அந்த அணிக்கு அவசியமானதாக அமைந்துள்ளது. அதோடு இந்த அணிகளின் பவுலர்கள் டீசென்டான லைனில் பந்து வீசினால் வெற்றி வசமாகும். என்ன நடக்கிறது என பார்ப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in