IPL 2023: CSK vs MI | அசால்ட் செய்த ரஹானே.. ஒரே ஓவரில் 23 ரன்கள்.. - 19 பந்துகளில் அரைசதம்

IPL 2023: CSK vs MI | அசால்ட் செய்த ரஹானே.. ஒரே ஓவரில் 23 ரன்கள்.. - 19 பந்துகளில் அரைசதம்
Updated on
1 min read

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கியுள்ள அஜிங்கியா ரஹானே அரைசதம் கடந்து விளாசி வருகிறார்.

16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 12 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியின்யின் சுழல் பந்துவீச்சில் சிக்கி சுருண்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி . ரோகித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர்.

சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 158 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வழக்கம் போல கான்வே, கெய்க்வாட் ஓப்பனிங் செய்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே கான்வேவை பூஜ்யத்தில் வெளியேற்றினார் பெஹ்ரன்டோர்ஃப். இதன்பின் ஒன்டவுன் வீரராக களம்புகுந்தார் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

வழக்கமாக கெய்க்வாட் தான் அதிரடி காட்டுவார். ஆனால் இன்று ரஹானே புகுந்து விளையாடினார். பெஹ்ரன்டோர்ஃப்பின் இரண்டாவது ஓவரில் சிக்ஸ் அடித்து பவுண்டரி கணக்கை துவங்கிய அவர், அர்ஷத் கான் வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 4 பவுண்டர்கள் உட்பட 23 ரன்கள் சேர்த்தார். இதன்பின்னும் அதிரடியை தொடர்ந்த ரஹானே, 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். பியூஸ் சாவ்லா ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்த அவர், 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். 8வது ஓவரில் சாவ்லாவின் பந்தை தூக்கி அடிக்க முயல அது சூர்யகுமார் யாதவ் கைகளில் கேட்ச் ஆக, தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்டார். சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் ரஹானே காட்டிய அதிரடி சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in