Published : 06 Apr 2023 06:54 AM
Last Updated : 06 Apr 2023 06:54 AM

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஷுப்மன் கில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஷுப்மன் கில் | கோப்புப்படம்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஷுப்மன் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். ரோஹித் சர்மா 8-வது இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸம் முதலிடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் டாப் 10-ல் இந்தியாவின் மொகமது சிராஜ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர், 3-வது இடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் 2-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 41-வது இடத்தை அடைந்துள்ளார். சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கு தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துகொண்டார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 2-வது இடத்தில் தொடர்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x