அதிக எக்ஸ்ட்ரா வீசிய சிஎஸ்கே பவுலர்கள் | இப்படியே போனால் புதிய கேப்டனுக்கு கீழ் ஆட வேண்டும்; தோனி ஓபன் டாக்

தோனி மற்றும் சென்னை பவுலர்கள்
தோனி மற்றும் சென்னை பவுலர்கள்
Updated on
1 min read

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் சிலர் அதிகம் எக்ஸ்ட்ரா வீசி வருகின்றனர். அதுவும் ஒய்டு மற்றும் நோ-பால் என இந்தப் பட்டியல் நீள்கிறது. நடப்பு சீசனில் இதுவரையில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி மொத்தம் 30 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்துள்ளது. லக்னோ உடனான போட்டியில் மட்டும் 18 ரன்களை சென்னை அணி எக்ஸ்ட்ராவாக வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 3 நோ-பால், 13 ஒய்டு மற்றும் 2 ரன்களை எல்பி ஆகவும் சென்னை லீக் வீசியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். லக்னோ உடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

“வேகப்பந்து வீச்சு யூனிட்டில் நாங்கள் கொஞ்சம் எங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது. கண்டிஷனுக்கு ஏற்ப பந்து வீச வேண்டும். எதிரணி பவுலர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதே போல பவுலர்கள் நோ-பால் அல்லது ஒய்டு வீசக்கூடாது. அப்படி இல்லை என்றால் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் இது எனக்கான இரண்டாவது எச்சரிக்கை” என தோனி சொல்லியுள்ளார்.

சென்னை அணி பவுலர்கள் நடப்பு சீசனில் அதிக எக்ஸ்ட்ரா வீசுவதனால் கேப்டன் தோனிக்கு ஸ்லோ ஓவர் ரேட் வார்னிங், அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரே சீசனில் ஒரு அணிக்கு இந்த எச்சரிக்கை மூன்று முறை கொடுக்கப்பட்டால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்படுவார். அதைத்தான் தோனி சொல்லியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in