Published : 27 Sep 2017 10:21 AM
Last Updated : 27 Sep 2017 10:21 AM

ஆஸி. அணியில் ஆன்ட்ரூ டை

ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இருந்து பேட் கம்மின்ஸை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் விடுவித்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக டி 20 ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளரான ஆன்ட்ரூ டை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ரூ டை இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 5 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். கடைசியாக அவர், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் விளையாடினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய ஆன்ட்ரூ டை, புனே அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தோள்பட்டையில் காயம் அடைந்த அவர், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x