சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஷகிப் அல் ஹசன் சாதனை!

ஷகிப் அல் ஹசன் | கோப்புப்படம்
ஷகிப் அல் ஹசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சிட்டகாங்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சாதனை படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

36 வயதான ஷகிப், ஆல்-ரவுண்டராக வங்கதேச அணிக்காக விளையாடி வருகிறார். 114 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 136 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் நியூஸிலாந்து வீரர் டிம் சவுதியை அவர் முந்தியுள்ளார். அயர்லாந்து வீரர் ஜார்ஜ் டாக்ரோலை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை ஷகிப் படைத்தார்.

நேற்று (மார்ச் 29) நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டி மழை காரணமாக 17 ஓவர்களாக மாற்றப்பட்டது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. லிட்டன் தாஸ், 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அயர்லாந்து அணி இலக்கை விரட்டியது.

இருந்தும் 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஷகிப், 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். வங்கதேச டி20 அணியின் கேப்டனாக அவர் இயங்கி வருகிறார். அவர் டி20 கிரிக்கெட்டில் இதுவரையில் 2,339 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் அவர் முதல் இடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in