Indian Grand Prix 2 - 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா!

அர்ச்சனா | கோப்புப்படம்
அர்ச்சனா | கோப்புப்படம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன். இதில் 100 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அவர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தை 11.52 நொடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 23.21 நொடிகளிலும் அவர் கடந்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை காட்டிலும் 0.22 நொடிகள் முன்னிலையில் பந்தய தூரத்தை அர்ச்சனா கடந்துள்ளார்.

கடந்த 2019 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் மகளிர் பிரிவில் பங்கேற்றிருந்தார். 2019 தெற்காசிய போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான அவர் மதுரையை சேர்ந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in