IPL 2023 | நாயகன் மீண்டும் வர்றார்... - தோனியின் என்ட்ரியும், மாஸான சிக்ஸும்!

IPL 2023 | நாயகன் மீண்டும் வர்றார்... - தோனியின் என்ட்ரியும், மாஸான சிக்ஸும்!
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் 2023 சீசன் பீவர் தொடங்கிவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில் பத்து அணிகளும் இந்த சீசனுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தங்கள் அணிகளுடன் வீரர்களும் இணைந்து வருகின்றனர். சில அணிகள் பயிற்சிகளை தொடங்கிவிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாகவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் கேப்டன் எம்எஸ் தோனி முதல் ஆளாக சென்னை வந்து அணியில் இணைந்திருந்தார். இன்று சென்னையில் நடைபெறும் ஆட்டத்துக்காக டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் இன்று வீரர்கள் மைதானத்தில் பயிற்சியும் மேற்கொண்டனர். ரசிகர்களும் பயிற்சியை காண அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் வீடியோ ஒன்று பதியப்பட்டுள்ளது. 'நாயகன் மீண்டும் வாரர்' என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் கேப்டன் தோனி பயிற்சிக்காக மைதானத்துக்குள் செல்லும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல் பயிற்சியில் தோனி சிக்ஸ் அடிக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in