உலக மாஸ்டர்ஸ் தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்: 95 வயதான இந்தியாவின் பகவானி தேவி தங்கம் வென்று அசத்தல்!

பகவானி தேவி | படம்: ட்விட்டர்
பகவானி தேவி | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

டோரன்: போலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு உலக மாஸ்டர்ஸ் தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த 95 வயதான பகவானி தேவி தங்கம் வென்றுள்ளார். வட்டு எறிதலில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக இலக்கை கடந்து தங்கம் வென்றிருந்தார். ஹரியாணாவின் கெட்கா கிராமத்தில் பிறந்த அவருக்கு 12 வயதில் திருமணம் ஆகியுள்ளது. 30 வயதில் கணவனை இழந்துள்ளார். அதன் பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல் நிலத்தில் வேலை செய்து தனது மகனை வளர்த்துள்ளார்.

அவரது மகன் டெல்லி நகராட்சி கார்ப்பரேஷனில் கிளார்க் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் மூலம் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது பகவானி தேவிக்கு மூன்று பேரப்பிள்ளைகள் உள்ளனர். இதில் அவரது மூத்த பேரன் விகாஸ் தாகர், இந்திய பாரா தடகள வீரர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in