ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக்-ஷிராக் ஜோடி சாம்பியன்

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக்-ஷிராக் ஜோடி சாம்பியன்
Updated on
1 min read

பாஸல்: ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற செட் கணக்கில் சீனாவின் ரென் ஜியாங் யூ, டான் கியாங் ஜோடியை வீழ்த்தியது. 54 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் சாட்விக்- ஷிராக் ஷெட்டி ஜோடி பெறும் முதல் பட்டம் இதுவாகும். மேலும் உலக அளவிலான போட்டிகளில் இந்த ஜோடி வெல்லும் 5-வது சாம்பியன் பட்டமாகும் இது.

கடந்த 2018-ல் ஹைதராபாத் ஓபன், 2019-ல்தாய்லாந்து ஓபன், கடந்த ஆண்டில் இந்தியா ஓபன், பிரெஞ்சு ஓபனில் இந்த ஜோடி பட்டம் வென்றிருந்தது.

மேலும் 2022-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளிலும் சாட்விக், ஷிராக் ஷெட்டி ஜோடி பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in