

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர் முகேஷ் சவுத்ரி காயமடைந்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த முகேஷ் சவுத்ரிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள கைலி ஜேமிசன், தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, மகேஷ் தீக்சனா ஆகியோரும் காயமடைந்துள்ளனர். கடந்த 2022 ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய முகேஷ் சவுத்ரி 13 ஆட்டங்களில் பங்கேற்று 16 விக்கெட்களைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.