IPL 2023 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த கான்வே, சான்ட்னர்!

கான்வே மற்றும் சான்ட்னர் | படம்: ட்விட்டர்
கான்வே மற்றும் சான்ட்னர் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

சென்னை: வரும் 31-ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சென்னையில் அதற்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தோனி, ஜடேஜா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போது அணியினருடன் நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த கான்வே மற்றும் சான்ட்னர் இணைந்துள்ளனர். 31 வயதான கான்வே கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 7 ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தம் 252 ரன்கள் எடுத்துள்ளார். 22 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 3 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 முதல் சான்ட்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் விளையாடியுள்ள 12 போட்டிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான். ஆல்-ரவுண்டரான இவர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை பயன்படுத்திக் கொள்கிறார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in