Published : 25 Mar 2023 08:11 PM
Last Updated : 25 Mar 2023 08:11 PM

IPL 2023 | சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை அணி போட்டிகளுக்கு மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை

கோப்புப்படம்

சென்னை: வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. இந்நிலையில், சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஆன்லைனில் பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தின் வழியே 27-ம் தேதி காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.

டிக்கெட் விலை விவரம்..

  • சி/டி/இ லோயர் ஸ்டேண்ட் - ரூ.1,500 - கவுன்ட்டர் விற்பனை
  • டி/இ அப்பர் ஸ்டேண்ட் - ரூ.3,000 - ஆன்லைன் விற்பனை
  • ஐ/ஜே/கே லோயர் ஸ்டேண்ட் - ரூ.2,500 - ஆன்லைன் மற்றும் கவுன்ட்டர் விற்பனை
  • ஐ/ஜே/கே அப்பர் ஸ்டேண்ட் - ரூ.2,000 - ஆன்லைன் மற்றும் கவுன்ட்டர் விற்பனை

சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிகள்

  • ஏப்ரல் 3- லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - சேப்பாக்கம்
  • ஏப்ரல் 12 - ராஜஸ்தான் ராயல்ஸ் - சேப்பாக்கம்
  • ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சேப்பாக்கம்
  • ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் - சேப்பாக்கம்
  • மே 6 - மும்பை இந்தியன்ஸ் - சேப்பாக்கம்
  • மே 10 - டெல்லி கேபிடல்ஸ் - சேப்பாக்கம்
  • மே 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சேப்பாக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x