IPL 2023 | ‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்சிபி அணியுடன் இணைந்த விராட் கோலி!

விராட் கோலி | கோப்புப்படம்
விராட் கோலி | கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: வரும் 31-ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் 2023 சீசனுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விராட் கோலி இணைந்துள்ளார். அவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டூப்ளஸ்சி தலைமையில் அந்த அணி விளையாடி வருகிறது. ஆர்சிபி அணியுடன் கோலி இணைந்துள்ளதை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வர்கிறார் கோலி. 2008 முதல் கடந்த 2022 வரையில் 15 சீசன்கள் விளையாடி உள்ள பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. வரும் சீசனில் 16-வது முறையாக அதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளது. மூன்று முறை ரன்னர்-அப் ஆகியுள்ளது.

ஆர்சிபி அணிக்காக விராட் கோலி இதுவரை.. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக அறியப்படும் 6,624 ரன்களை எடுத்தவர் கோலிதான். 223 போட்டிகளில் விளையாடி இந்த ரன்களை அவர் எடுத்துள்ளார். 5 சதங்கள் மற்றும் 44 அரைசதங்கள் இதில் அடங்கும். 578 பவுண்டரிகள் மற்றும் 218 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார். மொத்தம் 5,129 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். ஐபிஎல் பேட்டிங் சராசரி 36.20.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in