PAK vs AFG | டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் வீரர்கள் | படம்: ட்விட்டர்
ஆப்கானிஸ்தான் வீரர்கள் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

ஷார்ஜா: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியை நெருங்கி வந்த ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றிக் கோட்டை கடக்க முடியவில்லை. ஆனால், இந்த முறை அதை நேர்த்தியாக கடந்து வெற்றி பெற்றுள்ளது ஆப்கன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் கேப்டன் ரஷித் கான் உட்பட ஆப்கானிஸ்தான் பவுலர்கள் அபாரமாக பந்து வீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தி இருந்தனர்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆப்கன் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்தது. 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. பேட்டிங்கிலும் நபி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். இளம் வீரர்களை பாகிஸ்தான் அணி இந்த தொடரில் களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in