

இயல்பான கேப்டன்களில் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒருவர் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கேப்டன் பதவிக்கு சென்று அதற்கு உறை போன்று பொருந்தியவர்களில் ரோஹித்தும் ஒருவர். சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் அவருடைய உத்திகள் அபூர்வமானவை. அது களத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். கேப்டன் என்பவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். ரோஹித் சர்மா முன்வரிசையில் நின்று அணியை வழிநடத்துகிறார். அவர் தனது பணியை திறம்பட செய்கிறார். அவரைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.