மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்தியாவின் சாக்‌ஷி முன்னேற்றம்

சாக்‌ஷி | கோப்புப்படம்
சாக்‌ஷி | கோப்புப்படம்
Updated on
1 min read

புது டெல்லி: நடப்பு மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாக்‌ஷி. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயேவாவை 5-0 என்ற கணக்கில் அவர் வென்றிருந்தார்.

தன்னை எதிர்த்து விளையாடிய வீரங்கனையை கவுன்டர்-அட்டாக் செய்யவிடாமல் ஆடி அசத்தினார் சாக்‌ஷி. கடந்த 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 52 கிலோ எடைப் பிரிவில் அவர் காலிறுதிக்கு இப்போது முன்னேறியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் டேன்சிங் ரோஸ் போல அவரது ஆட்டம் இந்தப் போட்டியில் அமைந்திருந்ததாக தகவல். அந்த அளவிற்கு ரிங்கில் அவரது செயல்பாடு இருந்துள்ளது.

“நான் எதிர்பார்த்ததை விட இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தேன். ஜாசிரா உரக்பயேவா சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை. அதனால் எப்படியும் இந்தப் போட்டி நீண்ட நேரம் நீடிக்கும் என நான் நினைத்தேன். ஆனால், எனது வியூகம் எனக்கு பலன் கொடுத்தது. அதன் காரணமாக என்னால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது” என சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in